பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
49. முருக்குச் சுட்டவள்!

மாதர் சங்கத்தில் பல பெண்கள் ஒன்றுகூடி சமையல் குறிப்புப் பற்றி அளவளாவினர்.

அப்போது,

ஒவ்வொரு பெண்ணும் தத்தம் வீட்டில் புதுப் புதுப் பலகாரங்கள் செய்தது பற்றிக் கலந்துரையாடினர். அதிலே ஒரு பெண், “இன்றுதான் நான் சுத்தமான நெய்யிலே முருக்குச் சுட்டேன். மிகமிக அருமையாக இருந்தது” என்று சொன்னாள்.

அதற்கு அடுத்தவள், “ஏன் இவ்வளவு நாட்களாக நீங்கள் முருக்குச் சுட்டதே இல்லையா?” என்று கேட்டாள்,

அதற்கு முருக்குச் சுட்டவள் “நேற்றுத்தானே என் மாமியாருக்கு, டாக்டர் எல்லாப் பற்களையும் எடுத்து விட்டார்’ என்று பதில் சொன்னாள்.

எப்படி மருமகள்?

முன்னே சொன்ன மாமியார்கள் மத்தியில் இப்படியும் சில மருமகள் இருந்தனர் என்றும் தெரிகிறதல்லவா?


50. வேலை வாங்கும் முதலாளி

தன்னிடம் வேலைக்கு வரும் வேலைக்காரர்கள் அனைவனரயும் முட்டாள்கள் என்றே கருதி, எதையும் விபரமாக எடுத்துச் சொல்லி அனுப்புவார் முதலாளி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/86&oldid=962710" இலிருந்து மீள்விக்கப்பட்டது