பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
56. மூத்த மாப்பிள்ளை

ஒருசமயம் நான் என் நண்பர் ஒருவர் வீட்டிற்குப் போயிருந்தபோது, அவர் தன் அருகில் இருந்தவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். “இவர்தான் எங்கள் வீட்டு முதல் மாப்பிள்ளை. பெரிய மாப்பிள்ளையும் கூட. இவர் மிகவும் நல்லவர். ஏனெனில் எங்கள் குடுப்பத்துக்குப் பெரிய உதவி செய்துள்ளார். இதற்காக எங்கள் குடும்பமே இவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது” என்று முகமலர்ச்சியுடன் கூறினார்.

நான் வியப்படைந்து, அப்படிப்பட்ட உதவி இவர் என்ன செய்தார்?” என்று வினவினேன்.

அவர் மிக அமைதியாகச் சொன்னார். “இவருக்குப் பெண் கொடுத்த பின்புதான், இனிமேல் எவருக்கும் பெண் கொடுத்தால் நன்கு ஆலோசித்து கவனித்துப் பெண் கொடுக்க வேண்டும் என்ற அனுபவமே எங்களுக்கு உண்டானது. அது இவர் எங்களுக்குச் செய்த மிகப் பெரிய உதவியல்லவா?” என்றார்.

நான் இடிந்துபோய் உட்கார்ந்திருந்தேன். என்னத்தைச் சொல்ல?

57. நீதிபதியின் மகன்

சென்னை உயர்நீதி மன்றத்தில் பல ஆண்டு பண யாற்றிய நீதிபதி ஒருவர்க்கு, ஒரே மகன்தான் துணை. அவனை நல்லமுறையில் வளர்த்துப் பெரிய ஆளாக்க எண்ணினார்.

தானே சமையல் செய்து, மிக எளிமையாகக் குடும்பம் நடத்தி, வேலைக்கும் சென்று வந்தால், மகனுடைய படிப்பில் தனிக்கவனம் செலுத்த அவரால் முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/94&oldid=962719" இலிருந்து மீள்விக்கப்பட்டது