பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


இதைக் கேட்ட செல்வந்தரோ, “இவையெல்லாம் அமெரிக்காவில் இருக்கின்றன. ஆனால் ‘சமூக சேவை’ என்பதே இங்கு இல்லை. இந்த அமைப்புக்கே என் சொத்துக்கள் பயன்பட வேண்டும்” என்று கூறினார். சமூக சீர்திருத்தத் தொண்டு செய்பவர்களை உண்டாக்கவும், நன்கு பிரச்சாரம் செய்யவும், சொற்பொழிவாளர்கள் தேவை என்றும், அவர்களுக்குப் பெருந்தொகை சம்பளமாகக் கொடுக்கப்படும் என்றும் விளம்பரம் செய்தார். இதற்கு அறிஞர்கள், பேராசிரியர்கள். சொற் பொழிவாளர்கள் ஆகிய பல துறையினரிடமிருந்தும் 832 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன.

அப்போது செல்வந்தர் கூறினார், “நான் ஒரு மூடன் அமெரிக்காவில் சீர்த்திருத்தம் இல்லை என்று நினைத்தேன். சமூகத் தொண்டு புரிந்து நம் நாட்டைச் சீர்த் திருத்த 832 பேர் வந்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் சமூக சீர்திருத்தம் என்ன என்பதை நன்கு உணர்ந்தவர்களும், அதை மக்களுக்கு போதிக்கும் ஆற்றல் உள்ளவர் களாகவும் இருக்கிறீர்கள். ஆகவே,...

“என் பணத்தை இதற்கு வீணாகச் செலவிட விரும்ப வில்லை. தயவு செய்து நீங்கள் 832 பேரும் எவரையும் திருத்த வேண்டியதில்லை. உங்களை நீங்களே திருத்திக் கொண்டால் போதும். நம்நாடு உருப்பட்டுவிடும்.” என்று சொல்லி, விடை கொடுத்து அனுப்பிவிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/97&oldid=962722" இலிருந்து மீள்விக்கப்பட்டது