பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வார்ப்புரு:X—larger


59. யார் தவறு?

படிப்பறிவில்லாதவர் சட்டசபைத் தேர்தலில் நின்றார். வெற்றி பெற்றார். மந்திரியாகவும் ஆனார்.

அந்த ஊர்ப் பொதுமக்கள் மிகவும் மகிழ்ந்தனர் தங்கள் பள்ளிக்கூடக் கட்டிடத் திறப்பு விழாவிற்கு அவரை அழைத்தார்கள். அவரும் இசைந்துவிட்டார். ஆனால் அங்கே என்ன பேசுவது என்பது தெரியவில்லை.

தன் செயலரைக் கூப்பிட்டார்; பேசவேண்டிய பேச்சு—கேட்டுத் தெரிந்துகொண்டார்.

திறப்பு விழா மண்டபத்தே—

“இது ஒரு நல்ல பணி; இது போன்ற கட்டிடங்கள் இன்னும் பல கட்டியாக வேண்டும். இதிலே படிக்கின்ற மாணவர்கள் தொகை, மேலும் அதிக அளவில் பெருகி யாக வேண்டும் என்று நானும் வாழ்த்துகின்றேன். பெரு மக்களும் இது பெருகவேண்டுமென்று வாழ்த்துச் சொல்வார்கள்” என்றார். அவருக்கும் மகிழ்ச்சி, கூடியிருந்த எல்லோருக்கும் மகிழ்ச்சி

இதற்கு அடுத்த நாள் பக்கத்து ஊரிலே புதுக் கட்டிடம் — சிறைச்சாலைக்காக கட்டப்பட்டுத் திறப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/98&oldid=962723" இலிருந்து மீள்விக்கப்பட்டது