இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கனிகள்
99
538.சூரிய கிரணங்கள் போன்றவையே சொற்கள்; அதிகமாக ஒருமுகப்பட்டால் அக்கினியாய்ச் சுடும்.
ஸதே
539.நன்றாய்ப் பேசும் ஆற்றல் இன்மையும், நாவை அடக்கும் ஆற்றல் இன்மையும் பெரிய துர் அதிர்ஷ்டங்களாகும்
லா புரூயர்
540.சபையில் பேசாத காரணம் என்ன? முட்டாளாய் இருப்பதா, மொழிகள் கிடைக்கவில்லையா?—முட்டாள் ஒருநாளும் நாவை அடக்க முடியாது.
டிமாரட்டஸ்
541. பேச வேண்டிய காலம் அறியாதவன் பேச வேண்டாத காலமும் அறியான்.
பப்ளியஸ் ஸைரஸ்
542.மனிதனுக்கு மட்டுமே பேசும்சக்தி உளது; அதன் முதல் உபயோகமும் இறுதி உபயோகமும் கேள்விகள் கேட்பதே.
அர்னால்ட் பென்னட்
543.இந்த வாக்கியத்தின் பின்னால் ஒரு மனிதன் உள்ளனரா. இல்லையா? இது ஒரு ஆன்மாவைப் பிரதிபலிக்கின்றதா, இல்லையா? இதைப் பொறுத்ததே அதன் ஆற்றல்.
எமர்ஸன்