உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

அறிவுக்



555சுமுகமாயிருத்தல் என்பது விலையின்றிக் கிடைக்கும். ஆனால் அதைக்கொண்டு அனைத்தையும் வாங்க முடியும்.

பிராங்க்ளின்

556.அறிவைவிட அந்தரங்க விசுவாசமே சம்பாஷணையை அதிகச் சோபிதமாக்கும்.

ரோஷிவக்கல்டு

557.யாரேனும் தவறாகப் பேசினால் கண்டிக்க வசதியுண்டேல் உடனே கண்டித்துவிடு. கண்டிக்க வசதியின்றேல் பார்வையாலும் மெளனத்தாலும் அதிருப்தியைத் தெரிவித்துவிடு.

எபிக்டெட்டஸ்

558.பிறர் மனம் புண்ணாகாமல் பேசுவது அவசியமாவது போலவே பிறர் பேச இடங்கொடுத்து மரியாதையாகச் செவிசாய்ப்பதும் அவசியமாகும்.

ஹெச்.ஏ.

559.சாமர்த்தியத்தை விடத் தன்னம்பிக்கையே சம்பாஷணையில் ஜெயம் தரும்.

ரோஷிவக்கல்டு

560.எவர் பேசுவதையும் கேட்டுக்கொள்; ஆனால் சிலரிடமே பேச்சுக்கொடு. எவர் கஷ்டத்தையும் தெரிந்து கொள்; ஆனால் உன் கருத்தைக் கூறிவிடாதே.

ஷேக்ஸ்பியர்