பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

அறிவுக்


 568.மூடனுக்கு “மௌனமாயிரு” என்பதைவிட உயர்ந்த உபதேசம் கிடையாது. அதன் நன்மையை அறிந்து விட்டால் அவன் மூடனாயிரான்.

ஸாதி

569.மெளனம் என்பது மூடர்கள் பெற வேண்டிய அறிவு. அறிஞர் குணங்களில் ஒன்று.

பாய்லோ

570.சகல குணங்களிலும் மெளனம் சிறந்ததாகும். அதன் மூலம் பிறர் குறைகளை அறியவும் நம் குறைகளை மறைக்கவும் முடியும்.

ஜீனோ

571.ஒருவனைச் சந்தித்தால் அவன் வாய் திறவாதிருந்தால் அவனை அறிவுமிகுந்தவன் என்று எண்ணுவேன். இரண்டாம் முறையும் பேசாதிருந்தால் ஜாக்கிரதை உடையவன் என்று கருதுவேன். ஆனால் மூன்றாம் முறையும் மெளனம் சாதித்தால் அறிவு சூன்யம் என்று சந்தேகிப்பேன்.

கோல்ட்டன்

572.இரண்டு காதிருந்தும் ஒரு நாவே இருப்பதால் பேசுவதைவிடக் கேட்பதே அதிகமாயிருக்க வேண்டும்.

பழமொழி

573. இன்சொல் கூறுதல் எளிதே. ஆனால் தீயசொல் கூறாதிருக்க மெளனம் ஒன்றே தேவை. அதற்கு விலையொன்றும் தரவேண்டியதில்லை.

டிலட்ஸன்