பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

105



574அறிவு,மெளனம் கற்பிக்கும்; அன்பு பேசக் கற்பிக்கும்.

ரிக்டர்

575.முட்டாளின் உயர்ந்த ஞானம் மெளனம். அறிஞனின் பெரிய சோதனை பேச்சு.

குவார்ல்ஸ்

576.அறிவுள்ளவனே நாவைக் காக்கும் ஆற்றலுள்ளவன்.

லுக்காஸ்

577.மொழியாத மொழி ஒருநாளும் தீங்கு செய்வதில்லை.

காஸத்

578.காலமறிந்து மெளனமாயிருத்தல் கடினமான பாடமே. ஆனால் வாழ்வில் அறியவேண்டிய பாடங்களில் அதுவும் ஒன்றாகும்.

செஸ்ட்டர்பீல்டு

579.மெளனமாய் இருக்க முடியாதவன் பேசுவது எப்படி என்பதை அறியான். செய்வது எப்படி என்பதையோ, அதை அறியவே மாட்டான்.

லவாட்டர்

580.அறிஞர் சில மொழிகளில் பல கூறிவிடுவர். மூடர் பலமொழிகளில் சிலவே கூறுவர்.

ரோஷிவக்கல்டு

7