பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

அறிவுக்581.விஷயமில்லாத பொழுது விஷயமில்லை என்பதை வெளிக் காட்டாதவன் பாக்கியவான்.

ஜார்ஜ் எலியட்

582.எறும்பைப்போல் உபதேசிப்பவர் யாருமில்லை; ஆனால் எறும்போ பேசுவதே இல்லை.

பிராங்க்ளின்

583.பயனில் சொல்லுக்குப் பொறுப்பாவதுபோல் பயனில் மெளனத்துக்கும் பொறுப்பாவோம்.

பிராங்க்ளின்

584.நா தான் மனிதனிடமுள்ள நல்ல அம்சம்; கெட்ட அம்சமும் அதுவேதான். அது நம் வசமானால் அதைவிட உயர்ந்த பொருளில்லை. நாம் அதன் வசமானால் அதைவிடத் தீய பொருளில்லை.

அனார்காரிஸ்

585.பேச்சு பெரியதே; ஆனால் மெளனம் அதனினும் பெரியதாகும்.

கார்லைல்