பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

107



25. துதி

586.நம்மை மெச்சுவாரையேயன்றி நாம் மெச்சுவாரை நாம் ஒருபொழுதும் நேசிப்பதில்லை.

ரோஷிவக்கல்டு

587.பிறன் ஒருவனை அவன் விரும்பும் வண்ணம் மதித்தல் கடினமான காரியம்.

வாவனார்கூஸ்

588.யாரையேனும் மதித்துத்தான் தீரவேண்டுமானால், அவர் பிழையின் சுமையைத் தாங்கும் விதத்தை வைத்து மதிக்க வேண்டுமேயன்றி, அவர் அச்சுமையை ஏற்படுத்திக்கொண்ட காரியத்தை வைத்து மதிக்கலாகாது.

மார்லி

589.உன் தகுதி பிறர்க்குத் தெரிய வேண்டுமானால் பிறர் தகுதியை நீ அங்கீகாரம் செய்க.

பழமொழி

590. பிறருடைய உத்தமச் செயல்களை மனமுவந்து போற்றுதல் அவைகளை ஒரளவு நமக்கும் சொந்தமாக்கிக் கொள்வதாகும்.

ரோஷிவக்கல்டு