பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

அறிவுக்626.அதிகமான சிரிப்பு அறிவு சூன்யத்தையே காட்டும்.

கோல்ட்ஸ்மித்

627.எத்தனை விஷயங்கள் சிரிப்பில் அடங்கியுள! நெஞ்சைத் திறந்து அறிவதற்கேற்ற திறவுகோல் அதுவே. நகைக்க முடியாதவன் துரோகம், தந்திரம், திருட்டு முதலியன செய்யத் தகுந்தவன்.

கார்லைல்

628.வீணாக்கிய நாட்களுள் அதிகமாக வீணாக்கிய நாட்கள் நகையாத நாட்களே.

ஷாம்பர்ட்

629.ஆண்டுக்குப் பதினாயிரம் தரும் ஆஸ்தியைவிட அல்லும் பகலும் சந்தோஷமாயிருக்கும் இயல்பு கிடைத்தால் போதும்.

ஜோஸப் ஹ்யூம்

630.மகிழ்ச்சி பொங்கும் முகத்துடையவர் வந்தால் போதும், உடனே வீட்டில் புதியதோர் ஜோதி உதயமாகி விடும்.

ஆர்.எல்.ஸ்டீவன்ஸன்

631.உன் நோக்கத்தை வாளால் சாதித்துக் கொள்வதைவிட நகை முகத்தால் சாதித்துக் கொள்வதே சாலச் சிறந்த தாகும்.

ஷேக்ஸ்பியர்