பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

121



668.தவறான வழியில் லாபம் பெறாதே; தவறான வழியில் பெறும் லாபம் நஷ்டமேயாகும்.

ஹீலியாட்

669.உண்மையான செல்வம் பணமன்று, குணமேயாகும்.

ஆவ்பரி

670.ஒருவனுக்குத் தன்னைத் தவிர வேறு எது சொந்தம்? அவன் வேறு எதை அனுபவித்து ஆனந்தம் காண முடியும்?

ஆர்.எல்.ஸ்டீவன்ஸன்

671.செல்வனாயிருக்க முதலாவதாக வேண்டியது நிறைந்த உள்ளம்; இரண்டாவதாகவே பொருள்.

ஆர்.எல்.ஸ்டீவன்ஸன்

672.எதை உடையவன் என்பதன்று, எத்தகையவன் என்பதே வாழ்வின் பிரதான பிரச்னை.

ஆர்.எல்.ஸ்டீவன்ஸன்

673.நம்பவும் மகிழவும் உள்ள குணமே உண்மையான செல்வம். அஞ்சவும் வருந்தவும் உள்ள குணமே உண்மையான வறுமை.

ஹயூம்

674. வேண்டாதிருக்கக் கற்று கொள்வதே உடையவனாயிருப்பதாகும்.

ரெக்கார்ட்