பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132
அறிவுக்
 


733. அதிர்ஷ்ட தேவியின் குன்றின்மேல் இறக்கிவிடப்படுவதில் என்ன பெருமை உண்டு? சகல பெருமையும் அதில் ஏறிச் செல்வதிலேயே.

நெளல்ஸ்

734.அதிர்ஷ்டம் ஒரு சந்தையை ஒக்கும். அங்கே பலசமயங்களில் சிறிதுநேரம் காத்திருந்தால் விலைகள் இறங்குவதுண்டு.

பேக்கன்

735.அதிர்ஷ்டக் குறைவால் ஆனந்தம் கிடையாமல் இருக்கலாம். ஆனால், அவனவனேதான் தன்னை இழிஞனாக ஆக்கிக் கொள்கிறான்.

கார்லைல்

736.அதிர்ஷ்டதேவி சிலசமயங்களில் சுக்கானல்லாத தோனிகளும் கொண்டு வருவதுண்டு.

ஷேக்ஸ்பியர்


42. அடக்கம்

737.கதிர் நிறைந்தால் பயிர் தரையில் தொங்கும்.

பிஷப் ரெய்னால்ட்ஸ்

738.இறைவனே! என்னிடம் தாழ்மையை வேண்டுகிறீர். ஆனால் நான் இன்னும் அந்த உயர்ந்த பொருளை எட்டவில்லை.

டால்ஸ்டாய்