இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கனிகள்
133
739. எல்லோர்க்கும் பிறர்க்கு எஜமானாயிருக்க ஆசை. ஆனால் எவனும் தனக்கு எஜமானாயில்லை.
கதே
740.எஜமானனா? சில வேளைகளில் குருடாயிருக்கவேண்டும். ஊழியனா? சில வேளைகளில் செவிடாயிருக்கவேண்டும்.
- புல்லர்
741.மனித ஜாதியின் திறமைக்குள் அடங்கும் நன்மைகள் எல்லாம், “கீழ்ப்படிதல்” என்பதில் அடங்கும்.
மில்
742.நெஞ்சில் போர் நிகழ்த்தும்பொழுதுதான் நாம் கொஞ்சமேனும் பெறுமதி அடைகின்றோம்.
ராபர்ட் ப்ரெளணிங்
743.தன்னைத்தானே உயர்த்திக்கொள்பவன் தாழ்த்தப்படுவான். தன்னைத்தானே தாழ்த்திக்கொள்பவன் உயர்த்தப்படுவான்.
விவிலியம்
744.வாஞ்சையும் தாழ்மையும் துன்பங்களைச் சகித்துக் கொள்வதன் மூலமே கற்றுக்கொள்ள முடியும்.
ஜார்ஜ் எலியட்
745.தாழ்மையே அறிவுடைமையின் உத்தம அடையாளம்.
ஜெரிமி காலியர்