பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

அறிவுக்



757.சிக்கனம் இல்லையேல் யாரும் செல்வராக முடியாது. சிக்கனம் இருந்தாலோ வெகு சிலர் கூடத்தரித்திரர் ஆகார்.

ஜாண்ஸன்

758.தாராளம் சேருமானால் சிக்கனம் நல்லதே. சிக்கனம் என்பது அனாவசியச் செலவுகளை ஒழித்தலாகும். தாராளம் என்பது அவைகளைத் தேவையுள்ளவர்க்கு அனுகூலமாக உபயோகிப்பதாகும். தாராளமிலாச் சிக்கனம் பிறர் பொருளில் ஆசையைப் பிறப்பிக்கும். சிக்கனமிலாத் தாராளம் வீண் பொருள் விரயத்தை விளைவிக்கும்.

பென்

759.சிக்கனம்—அதுவும் ஒரு வித வருமானமே.

ஸெனிக்கா

760.வருமானத்தைவிடக் குறைவாகச் செலவு செய்ய அறிந்துவிட்டால் ரசவாத ரகசியத்தை அடைந்து விட்டவர் ஆவோம்.

பிராங்க்லின்

761.தந்தை மகற் காற்றும் உதவி அதிகம் வைத்துப் போவதன்று; குறைவானதைக் கொண்டு சரியாக வாழக் கற்பிப்பதே.

பென்

762.வேண்டாத வஸ்து ஒரு நாளும் மலிவான தன்று. அது காசுக்கு ஒன்றானாலும் கிராக்கியே.

ப்ளுட்டார்க்