பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

அறிவுக்


793.அதிர்ஷ்டம் அதிகமாக அளிக்கக் கூடும், ஆயினும் அதிகத்தைப் போதுமானதாக்குவது மனமே.

பாயில்

794.விரும்புவதைப் பெற முடியாதாகையால் பெற முடிவதை விரும்புவோமாக.

ஸ்பானிஷ் பழமொழி

795.ஈயே! போ, உனக்கேன் துன்பம் இழைக்க வேண்டும்? இருவர்க்கும் உலகில் இடம் உளதே.

ஸ்டோன்

796.திருப்தியுள்ள பன்றியாயிருப்பதினும் திருப்தியில்லா மனிதனாயிருப்பதே நலம். திருப்தியுள்ள மூடனாயிருப்பதினும் திருப்தியில்லா ஞானியாயிருப்பதே நலம். பன்றியும் மூடனும் வேறாக நினைத்தால் அதற்குக் காரணம் அவர்களுக்குத் தங்கள் கட்சி மட்டுமே தெரியும்; இரண்டு கட்சியையும் பிறரே அறிவர்.

மில்

797.அனுபவித்துத் தீரவேண்டியதற்கு எதிராக வாதமிட்டுப் பயனில்லை. வாடைக் காற்றுக்கு ஏற்ற வாதம் இறுகப் போர்த்திக் கொள்வது ஒன்றே.

லவல்

798.திருப்தியுள்ள மனமே தீராத விருந்து.

ஆங்கிலப் பழமொழி