பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

அறிவுக்



843. எந்தக் கல்வி தேவை? ஒரு மூட்டை நூல்களை வாசித்தலா? அன்று. அடக்கம், ஒழுங்கு அறம், நீதி இவற்றின் முன்மாதிரிகளே தேவை.

பர்க்

844.கல்வியின் லட்சியம் விஷயங்களை அறிவது அன்று, வேலைக்கு அடிகோலுவது மன்று, சான்றோனாகவும் அறிஞனாகவும் செய்வதேயாகும்.

ரஸ்கின்

845.கல்வி கற்பிக்க ஒவ்வொருவனிடம் ஒரு மாணவனாவது இருக்கவே செய்கிறான்.

ஆவ்பரி

846. ஜீவராசிகள் அனைத்திடமும் அன்பு செய்யத் துண்டுவதே உண்மையான கல்வி. ஆனந்தம் அளிப்பதும் அதுவே.

ரஸ்கின்

847.சரியான வழியில் சந்தோஷம் அடையச் செய்யாத கல்வி எல்லாம் வீணேயாகும்.

ரஸ்கின்

848.நடை எழுதவும் இசை பாடவும் உருவந்தீட்டவும் முழு வல்லமை பெற்றபொழுதே கல்வி முற்றுப் பெறும்.

ரஸ்கின்