பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/154

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

151



849.சொந்தக் காரியம் பொதுக் காரியம் எல்லாவற்றையும் நியாயமாயும் சாமர்த்தியமாயும் பெருந்தன்மையாயும் செய்யக் கற்றுக் கொடுப்பதே பரிபூரணமான கல்வியாகும்.

மில்டன்

850.இளஞ்சிறார் செவிமடுக்க வேண்டிய மொழிகள் இவையே:—“உனக்குவேண்டியதை நீயே உண்டாக்கிக் கொள்ளலாம். நீ பட்டினி இருப்பதும் இல்லாததும் உன் முயற்சியைப் பெறுத்ததேயாகும்.”

மெல்போர்ன்

851.இளமையில் கல்வியைப் புறக்கணித்தவன் இறந்த காலத்தை இழந்தவன், எதிர்கால விஷயத்தில் இறந்தவன்.

யுரீப்பிடீஸ்

852.குழந்தைகளை முதலில் “மனிதர்” ஆக்குங்கள். பின்னால் “மதானுஷ்டானிகள்” ஆக்காலம்.

ரஸ்கின்

853.குழந்தையை எத்தகைய வழ்விற்குத் தயார் செய்ய வேண்டும் என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ளாவிட்டால் ஆசிரியன் எவனும் கல்வி அபிவிருத்தி செய்ய முடியாது.

ரஸ்கின்

584.மாணவனிடம் செய்ய முடியாததைச் செய்யச் சொல்லாதவரை, அவன் செய்ய முடிந்ததையெல்லாம் ஒரு பொழுதும் செய்யப் போவதில்லை.

மில்