பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

அறிவுக்



868. கல்வி கற்பிக்கும் ஆசிரியன் நூலறிவைப் புகட்டும் பொழுது மெய்யறிவை மறந்து விடலாகாது.

டெம்பிள்

869. ஆராய்ச்சி முறையை ஒட்டிய கல்வி முறையே இணையற்றதாகும்.

பர்க்

870.வாழக் கற்பிப்பவன் மரிக்கவும் கற்பிக்கக் கடவன்.

யங்

871.செடியின் மூட்டில் மண்ணை அணைத்து வை. ஆனால் மலருக்குள் விழுந்து விடாமற் பார்த்துக் கொள். உலகவிஷயங்களை எல்லாம் கற்றுக் கொள். ஆனால் அவைகளிடம் ஆன்மாவைப் பறிகொடுத்து விடாதே.

ரிக்டர்

872.நாம் பெறும் கல்வியில் அதிகச் சிறப்பான பாகம் நமக்கு நாமே கொடுத்துக் கொள்வதுதான்.

ஸ்காட்

873.சான்றோனாக்காத கல்வி சாமர்த்தியமாய்க் கழித்த சோம்பலே யாகும். அதனால் பெறும் அறிவும் தன்னைப் பிறர் மெச்சும்படி செய்ய மட்டும் கற்றுக் கொண்ட ஒருவித மடமையேயன்றி வேறன்று.

போலிங்புரூக்