பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

13



2. அறம்


லிங்கன்


27. அறத்தின் வழி நில்! அஞ்சவேண்டாம்! உன் லட்சியமெல்லாம் உன் தேசத்தை-உன் கடவுளை - உண்மையைப் பற்றியதாகவே இருக்கட்டும். அங்ஙனமாயின் நீ வீழ்ந்து விட்டாலும் பாக்கியம் பெற்றுத் தியாகியாகவே வீழ்வாய்.

ஷேக்ஸ்பியர்

28. அறத்தின் இலட்சணம் அறியாதவரே, 'அறம் செய்தோம், கூலி எங்கே?' என்று இரைந்து கொண்டிருப்பர்.

மேட்டாலிங்க்

29. அதர்மம் அணியும் ஆடை ஐஸ்வரியம்; தர்மம் தரிப்பது தரித்திரம்.

தியோக்னீஸ்

30. பிறர்க்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக்கொள்கிறான்.

ஸெனீக்கா

31. குளிர் மிகுதிதான். கந்தை உடைதான்! ஆனால் என் ஒழுக்கம் எனக்கு உஷ்ணம் தரும்.

ட்ரைடன்

32. அறமே ஆற்றல் என்பதை நம்புவோமாக. அந்த நம்பிக்கையில் நாம் அறிந்த கடமையைச் செய்யத் துணிவோமாக,

ஆப்ரஹாம் லிங்கன்