பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/160

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்
157
 

அறிவுக் கனிகள்.pdf
55. கவிதை

885. பெரிய கவிஞன் ஒவ்வொருவனும் ஒரு ஆச்சாரியனே. அவ்விதம் கருதப்படவே நானும் விரும்புகின்றேன்.

வோர்ட்ஸ்வொர்த்

886.ஆராய்ச்சி என்பது மரத்திலிருந்து அடிக்கடி பூக்களுடன் புழுக்களையும் எடுத்துக் கொள்ளும்.

ரிக்டர்

887.கூறியது யார் என்று அறிவதற்குக் கூறியதை மட்டுமே ஆராய்க.

ஆக்கம்பிஸ்

888.ஆறுதலளிக்கும் தோத்திரப் பாடல்கள் மனத்தைச் சந்தோஷமும் சாந்தியும் உள்ள நிலைமையில் வைக்கும்.

பேஸில்

889.நம்மை அறியாமலே நம்முடைய மனத்திற்குள் புகும் போதனையே நாம் கவி மூலம் பெறும் போதனை.

லாம்

890.இதயத்தில் நல்லுணர்ச்சிகளை ஏற்படுத்துவதைத் தவிர ஏனையவெல்லாம் பேதமை என்று கருதுவதே கவிஞனின் நோக்கமும் தொழிலுமாகும்.

ஸ்காட்