பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/163

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

அறிவுக்



905. கவிதை வெற்றி பெறுவது அழுவதை மாற்றுவதிலும் மனத்திற்குத் திருப்தி அளிப்பதிலுமில்லை. அடையமுடியாததை அடைவதற்காக மறுபடியும் முயற்சி செய்யும்படி நம்மை எழுப்பி விடுவதிலேயே உண்டு.

எமர்ஸன்

906.கண்ணுள்ளவன் கவிஞன்.

இப்ஸன்

907.எனக்கு தேசத்துக்கு வேண்டிய பாடங்களைப் பாடும் பாக்கியம் கிடைத்தால் போதும் யார் வேண்டுமானாலும் சட்டங்கள் செய்யும் அதிகாரத்தை வகித்துக் கொள்ளட்டும்.

பிளச்சர்

908.உயர்ந்த கவிதையை சிருஷ்டிக்க விரும்புபவன் தன் வாழ்வு முழுவதையுமே ஒரு உன்னதக் கவிதையாக ஆக்கிக்கொள்ளக் கடவன்.

மில்டன்


56. நூல்கள்

909. ஒரு பொழுது கூடத் திறக்காவிடினும் சரி, ஒரு மொழிகூடப் படிக்காவிடினும் சரி, நூல்களைப் போல வீட்டை அலங்கரிக்கும் அழகான பொருள்கள் வேறு கிடையா.

ஸிட்னி ஸ்மித்