பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

அறிவுக்



971.அறிஞன் சமாதானப் பிரியர், ஆயுதம் பூண்பதில்லை. ஆனால் அவர் நாவோ க்ஷவரக் கத்தியிலும் அதிகக் கூர்மையானது. அவர் பேனாவோ அதைவிட அதிகக் கூர்மை உடையது.

ப்ரெளண்

972.ஒரு எளிய அழகான வாக்கியம் எழுதப் பல வருஷங்கள் ஒரு முகமாக உழைத்தால் முடியும் என்பதை அறிவேன்.

டங்கன்

973.உண்மையான ஆசிரியனை உலகக் கஷ்டம் எதுவும் அடக்கிவிட முடியாது. ஒய்ந்துபோன ஆசிரியனை எவ்வித அதிர்ஷ்டமும் தூக்கி நிறுத்திவிட முடியாது.

நாரிஸ்

974.படிப்போருடைய காலத்தை வீணாக்காமல் அதிகமான அறிவைக் கொடுக்கும் நூலை இயற்றும் ஆசிரியனே அதிகப் பயன் தருபவன் ஆவான்.

ஸிட்னி ஸ்மித்

975.வாலிப ஆசிரியர்கள் தம் மூளைக்கு அதிகப் பயிற்சி கொடுக்கிறார்களேயன்றி போதுமான உணவு கொடுப்பதில்லை.

ஜூபர்ட்

976.தெரிந்தவற்றைப் புதியனவாகவும் புதியனவற்றைத் தெரிந்தனவாகவும் செய்யக்கூடிய சக்தியே ஆசிரியனிடத்தில் நம்மை ஈடுபடுத்தும்.

தாக்கரே