பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்
173
 

அறிவுக் கனிகள்.pdf
கதே

977.இதுவரை யாரும் கூறாததைக் கூறுவதொன்றே சிறப்பு என்று எண்ணற்க. இதற்கு முன் இதுவரை யாரும் கூறவில்லை என்று எண்ணுமாறு அதைக் கூறுவதும் சிறப்பே யாகும்.

-கதே


61. பாண்டித்தியம்

978. பண்டிதர் என்பவர் படித்துப் படித்துக் காலத்தைக் கொல்லும் சோம்பேறிகளாவர்.

பெர்னார்ட் ஷா

979.அயல் பாஷை எதுவும் அறியாதவன் தாய் பாஷையையும் அறியாதவனே.

ஸெயின்ட் பூவ்

980.பாண்டித்தியம் தலைக்குள் பல பொருள்களை நிரப்பும். ஆனால் அப்படிச் செய்வதற்காக அது மூளையை எடுத்து வெளியே எறிந்துவிடவும் செய்யும்.

கோல்ட்டன்

981.பாண்டியத்தியமின்றி பாவனாசக்தி மட்டும் உடையவருக்குச் சிறகுகள் உண்டு. கால்கள் கிடையா.

ஜூபெர்ட்