உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

175



987.சிறந்த எழுத்தாளர் பிறர் எழுதும் வண்ணம் எழுதாமல் தாம் எழுதும் வண்ணமே எழுதுவர்.

மாண்டெஸ்க்யூ

988.இவர் எழுதுவதில் தெளிவில்லை என்று கூறுவோர் அப்படிக் கூறுமுன் தம் இதயத்தில் தெளிவுண்டா என்று ஆராய்தல் அவசியம். எழுத்து எழுத்தாகப் பிரித்து எழுதியிருந்தாலும் கண்ணுக்கு இருட்டில் ஒன்றும் புலனாகாது.

கதே

989. தெளிவில்லாத உரைநடை படிப்போர்க்கு விளங்காத நடை எனவும், எழுதியவனுக்கு விளங்காத நடை எனவும் இருவகைப்படும்.

மாரி


63. ஜீவிய சரிதம்

990. சரியாக ஆராய்ந்து பார்த்தால் " சரித்திரம்" என்று ஒன்று இல்லை; உள்ளது ஜீவிய சரிதமே.

லாண்டார்

991.சகல நூல்களிலும் அதிகமான சந்தோஷம் அளிப்பதும் உபயோகமானதும் ஜீவிய சரிதமே.

லாண்டார்

992.உண்மையாக எழுதும் ஜீவிய சரிதம் எப்பொழுதும் உபயோகமே செய்யும்.

ஜாண்ஸன்