பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

21


ரூஸோ

74. தீச் செயல் நம்மைத் துன்புறுத்துவது, செய்த காலத்தில் அன்று. வெகு காலம் சென்று அது ஞாபகத்திற்கு வரும்பொழுதுதான். அதற்குக் காரணம் அதன் ஞாபகத்தை ஒருபொழுதும் அகற்ற முடியாததே.

ரூஸோ

75. மனிதன் பிறர்க்குக் கேடு சூழ்வதில் தனக்கே கேடு சூழ்ந்துகொள்கிறான்.

ஹேஸியாட்


76. அறத்திற்குப் போலவே மறத்திற்கும் பிராணத் தியாகிகள் உண்டு.

கோல்டன்

77. தீய செயல் குறித்துத் தெய்வத்தின் முன் நாணாமல், மனிதன் முன் நாணக் கற்றுக்கொள். அப்பொழுதே விமோசனம் ஆரம்பமாகும்.

ரஸ்கின்

78. ஓடைகள் சேர்ந்து நதிகள், நதிகள் சேர்ந்து கடல். அதுபோலவே தீய வழக்கங்கள் அறியா அளவாகக் கூடி வளர்ந்துவிடும்.

ட்ரைடன்

79. உடல் துன்பம், மனச்சான்றின் பச்சர்த்தாபம் இவ்விரண்டும் தவிர இதர துன்பங்கள் எல்லாம் வெறுங்கற்பனைகளே, உண்மையானவை அல்ல.

ரூஸோ