பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

அறிவுக்


என்னைக் கோட்டால் - இடது கையில் உள்ளதை விரும்பினால் என்றும் இருட்டிலேயே இருக்க வேண்டியிருப்பினும் - நான் இடது கை முன் தலையைத் தாழ்த்தி, 'தந்தையே, தாரும்; உண்மை உமக்கே உரியது' என்று கூறுவேன். ஏனெனில், மனிதன் உண்மையை அடைவதாலன்றி உண்மையைத் தேடுவதாலேயே பரிபூரணத்துவத்தைத் தன்னிடம் இடைவிடாது வளர்த்துக் கொள்வதற்குரிய தன் சக்திகளை விருத்தி செய்துகொள்கிறான்.

லெஸ்ஸிங்

93. உண்மையை நேசி. ஆனால், பிழையை மன்னித்து விடு.

வால்டேர்

94. அன்பு சில குறைகளையும், அறிவு சில பிழைகளையும் பொருட்படுத்தா. ஆனால், உண்மை எந்த அவமானத்தையும் மன்னிக்காது; எந்தக் குறையையும் பொறுக்காது.

ரஸ்கின்

95. உண்மை நாடவே நமக்கு உரிமை ஆண்டவனுக்கே அது உடைமையாகும்.

மான்டெய்ன்

96. உண்மையை அடைய விரும்பினால் உண்மைக்குரிய வழியில் சிறுகச் சிறுக முன்னேறிச் செல்க.

டாலர்