பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

25


மான்டெய்ன்

97. மனிதன் பிறந்துள்ளது உண்மையைத் தேடவே. ஆனால் அதை அடையும் பாக்கியம் வேறொரு பெரிய சக்திக்கே உண்டு.

மான்டெய்ன்

98. உண்மை பேசல் அழகாய் எழுதுவதை ஒக்கும். பழகப் பழகவே கைகூடும். ஆசையைவிடப் பழக்கத்தையே பொறுத்ததாகும்.

ரஸ்கின்

99. உண்மையைக் கண்டுபிடிப்பதே மனிதனுடைய மகோன்னதமான லட்சியம், உண்மையைத் தேடுவதே பரமோத்தமமான தொழில். அது அவனுடைய கடமையும் ஆகும்.

எட்வர்ட் போப்ஸ்

100. நம்பக்கம் உண்மையிருப்பது வேறு. நாம் உண்மையின் பக்கத்தில் இருக்க விரும்புவது வேறு.

லிட்வா

101. எல்லா அம்சங்களிலும் உண்மையான உபதேச மொழிகள் சிலவே.

வாவனார் கூஸ்

102. ஒன்றே உள்ளது. பல மாறி மறையும். விண்ணின் வெளிச்சம் என்றும் ஒளி தரும். மண்ணின் நிழல்கள் பறந்தோடிவிடும்.

ஷெல்லி