பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

அறிவுக்


ராபர்ட் பிரெளணிங்

103. உண்மை உரைப்பதற்குச் சாத்தியமான ஒரே வழி கலைதான், அதுதான் கலையின் புகழும் நன்மையும் ஆகும்.

ராபர்ட் பிரெளணிங்

104. பொருள் சேர்ப்பதில் மட்டுமன்று புகழ் தேடுவதிலுங்கூட நாம் மரிக்கும் மனிதரே.

ஆனால், உண்மையை நாடுவதில் நகம் அமரர். அழிவுக்கும் மாறுதலுக்கும் அஞ்ச வேண்டுவதில்லை.

தோரோ

105. பெரிய விஷயங்களைப் போலவே சிறிய விஷயங்களையும் கவனிக்கக்கூடிய மனமே உண்மையும் உரமும் பொருந்திய மனமாகும்

டாக்டர் ஜான்ஸன்

106. ஒவ்வொன்றிலும் நன்மையைக் காணவும் போற்றவும் அறிவதே உண்மையிடம் ஆசை உண்டு என்பதற்கு அடையாளம்.

கதே

107. உண்மை மனிதனுக்குச் சொந்தம்; பிழை அவனுடைய காலத்துக்குச் சொந்தம்.

கதே

108. உண்மை ஒரு பெரிய தீவர்த்தி. அருகில் செல்ல பயந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டே அதைக் கடந்து செல்கிறோம்.

கதே