பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

29


ஸோபோகிளீஸ்

123.  எந்தப் பொய்யும் வயோதிகம் அடையும் வரை வாழ்ந்ததில்லை.

ஸோபோகிளீஸ்

124. மனிதனுடைய முதல் மொழி 'ஆம்' இரண்டாவது 'அன்று'; மூன்றாவதும் இறுதியானதும் 'ஆம்'. பலர் முதலாவதோடு நின்று விடுவர்; வெகு சிலரே இறுதி மொழிவரை செல்வர்.

பழமொழி

125.முதலில் தூசியைக் கிளப்பி விடுகிறோம். பின்னால் பார்க்க முடியவில்லை என்று முறையிடுகிறோம்.

பிஷப் பார்க்லி

126.மெய்யும் பொய்யும் கை கலக்கட்டும். பகிரங்கமாகக் கை கலந்து போர் புரியின், என்றேனும் மெய் தோல்வியடைந்ததைக் கண்டவர் உளரோ?

மில்டன்

127.பாவத்திற்குப் பல கருவிகள் உண்டு. ஆனால் அவற்றிற்கெல்லாம் பொருத்தமான கைபிடி பொய்.

ஹோம்ஸ்


128. பொய்யானவற்றால் கவரப்படும் மனம் நல்ல விஷயங்களில் சுவை காணாது.

-ஹொரேஸ்

129.முதலில் ஒரு குற்றம் செய்தவன் அதை மறைக்கப் பொய்யுரைக்கும் பொழுது இரண்டு குற்றங்கள் செய்தவனாகிறான்.

வாட்ஸ்