பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

அறிவுக்143.தெய்வபக்தி லட்சியமன்று, சாதனமே. அந்தச் சாதனத்தால் ஆன்ம விருத்தி அடையலாம். வேஷதாரிகளே தெய்வ பக்தியை லட்சியமாகச் செய்து கொள்வர்.

கதே

144.பரிபூரண நிலையில் ஆன்மாவுக்கு ஏற்படும் சொற்ப அவாவை வைத்தே கடவுள் இருப்பதைக் கணித சாஸ்திரமுறையைக் காட்டிலும் அதிகமாய் நிரூபித்துக் காட்டலாம்.

ஹெம்ஸ்டர் ஹூஸ்

145.'அவன்' என்னும் மொழி அவனைக் குறைத்து விடுகிறது.

டால்ஸ்டாய்

146.ஆண்டவன் இலன் எனினும் அறநெறி நிற்போம் என்பவரே அவன் அடியராவர்.

ராபர்ட் பிரெளனிங்

147.ஒருவன் கடவுள் பக்கம் இருப்பின், அவன் ஒருவனே பெரும்பான்மைக் கட்சி ஆகிவிடுவான்.

வெண்டெல் பிலிப்ஸ்

148.ஆன்மாவுக்கு வெளியே கடவுளைத் தேடினால் கடவுளின் விக்கிரகங்களை மட்டுமே காண்பாய். ஆன்மாவை ஆராய்ந்தால் அங்குள்ள உணர்ச்சிகளும் எண்ணங்களும் ஆண்டவனை அறிவிக்கும்.

149.அயலார்க்கு நன்மை செய்யும்பொழுதுதான் ஆண்டவனைத் துதிப்பதாகக் கூறமுடியும்.

-ஸ்வனரோலா