பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

35



6. நிரீச்வர வாதம்

162. தத்துவ ஞானம் சிறிதே பெற்றால் நிரீச்வரவாதியாக்கும்; ஆழ்ந்ததாகப்பெற்றால் ஈச்வரவாதியாக்கும்.

பேக்கன்

163. கடவுள் தன்னை நிரூபிக்க ஒருநாளும் அற்புதங்கள் காட்டுவதில்லை. அவருடைய சாதாரண சிருஷ்டிகளே போதும்.

பேக்கன்

164. நிரீச்வர வாதம் தத்துவ சாஸ்திரியின் தவறேயன்றி மனித இயல்பின் தவறன்று.

பான்கிராப்ட்

165. நல்லோர் வருந்தல் - தீயோர் வாழ்தல் இவையே நிரீச்வர வாதத்துக்குக் காரணம்.

ட்ரைடன்

166. நிரீச்வர வாதம் எந்தப் பெரிய உண்மைகளை மறுக்கிறதோ அவற்றையெல்லாம் பெறுவதற்கு வேண்டிய நம்பிக்கையைப் பார்க்கிலும் மிக அதிகமான நம்பிக்கை வேண்டும் ஒருவன் நிரீச்வரவாதியா யிருப்பதற்கு.

அடிஸன்


7. பிரார்த்தனை

167. கடவுளை நோக்கி நிற்கும் ஆசையே பிரார்த்தனையின் தெளிவான லட்சியம் ஆகும்.

பிலிப்ஸ் புரூக்ஸ்