பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

அறிவுக்



168. கடவுளிடம், இது 'வேண்டும்' என்று குறிப்பிடாமல் பொதுவாகப் பிரார்த்திப்பதே முறை. நமக்கு நன்மை எது என்பதைக் கடவுள் நன்கு அறிவார்.

ஸாக்ரடீஸ்

169.மனிதனுடைய இதயம் ஊமையாய் இருந்தாலன்றி கடவுள் ஒருநாளும் செவிடாய் இருப்பதில்லை.

குவார்ல்ஸ்

170.கடவுளிடம் மக்கள் பிரார்த்திப்பது எல்லாம் இரண்டும் இரண்டும் நான்கு ஆகாமலிருக்க வேண்டும் என்பதே.

ருஷ்யப் பழமொழி

171.நாம் கடவுளிடம் எதை வேண்டுகிறோமோ அதையே கடவுள் நம்மிடம் வேண்டுகிறார்.

ஜெரிமி டெலய்ர்

172.நமக்குத் தேவையான எல்லாம் கடவுளிடம் வேண்டலாம். ஆனால், வேண்டுவதற்கெல்லாம் நாம் கவனமாய் உழைத்தல் அவசியம்.

ஜெரிமி டெய்லர்

173.'கடவுளே! தைரியம் அருளும்! என்று பிரார்த்தித்தால், துன்பத் தீயில் தள்ளுவதே அவர் அருளும் வழி.

ஸெஸி

174.என் பிரார்த்தனைகளுக்கு எல்லாம் கடவுள் அருளவில்லை என்பதற்காக அவருக்கு வந்தனம் அளிக்குமாறு வாழ்ந்துவிட்டேன்.

ஜீன் இன்ஜெலோ