பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

55



14. நன்மை–தீமை

279. நன்மை யென்றும் தீமை யென்றும் இல்லை; அவ்விதம் ஆக்குவது மனமே.

ஷேக்ஸ்பியர்

280.‘நன்மை,’ ‘தீமை’—நம் அறியாமையால் எழும் இரு பெயர்கள்.

நம் மனத்திற்கு உகந்ததை ‘நன்மை’ என்கிறோம், பிறர் மனத்திற்கு உகந்ததைத் 'தீமை' என்கிறோம்.

‘தீமை’ - நமக்குத் தீங்கிழைப்பது. 'நன்மை' அநேகமாய்ப் பிறர்க்குத் தீங்கிழைப்பது.

பால் ரிச்சர்டு

281.நேர் வழியில் அடைய முடியாததை ஒருநாளும் நேரல்லாத வழியில் அடைந்துவிட முடியாது.

கதே

282.அற்ப விஷயங்கள் மனத்தைக் கலக்கினால் அதிர்ஷ்டசாலி என்று அர்த்தம். துரதிர்ஷ்ட காலத்தில் அற்ப விஷயங்கள் உணர்ச்சிக்கு எட்டுவதில்லை.

ஷோப்பனார்

283.எப்பொழுதும் நமது சூரிய ஒளியில் ஒரு கறுப்புப் புள்ளி உண்டு; நமது நிழலே அது.

கார்லைல்

284.ஐயோ! பேயை அடக்குவதினும் எழுப்புவது எளிது.

காரிக்