பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

அறிவுக்



309. உண்மை ஞானம் கண் முன் இருப்பதைக் காண்பதன்று, பின் வருவதை முன் அறிவதாகும்.

டெரன்ஸ்

310. எதை நாம் அறியவில்லையோ அது நம்முடைய தன்று.

கதே

311.ஒரு விஷயத்தைப் பல வாயிலாகப் பார்க்க முடியாத புத்தி குறுகியதாகும்.

ஜார்ஜ் எலியட்

312.தான் தானாகவே இருக்க அறிவதே உலகில் பெரிய விஷயம்.

மான்டெய்ன்

313.அறிவின் முதல் பாடம் ஐஸ்வரியத்தை வெறுப்பது; அன்பின் முதல் பாடம் ஐஸ்வரியத்தை அனைவருக்குமாகச் செய்வது.

ரஸ்கின்

314.உண்மை அறிவு அன்பில் கொண்டு சேர்க்கும்.

வோர்ட்ஸ்வொர்த்

315.உண்மையின் பெருங்கடல் நம்மால் அறியப்படாமல் பரந்து கிடக்கின்றது. நாமோ, கடற்கரையில் விளையாடி, அங்குமிங்கும் ஓடி, அழகான ஒரு சிப்பியையும் மெல்லிய ஒரு கடற் பாசியையும் கண்டு மகிழ்ந்து நிற்கும் சிறு குழந்தைகளைப் போல் இருக்கிறோம்.

ஆவ்பரி