பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

அறிவுக்


டெனிஸன்


322.நூலறிவு வந்துவிடும், மெய்ஞ்ஞானம் வரத் தயங்குகின்றது.

டெனிஸன்

323.பிறர் வாசித்திருந்த அளவு நானும் வாசித்திருந்தால் அவர்களைப் போலவே நானும் அறிவில்லாதவனா யிருப்டபேன்.

ஹாப்ஸ்

324.அறிவாளி தன்னை மட்டும் உடையவனாயிருந்தால் போதும், அவன் ஒருபொழுதும் எதையும் இழப்பதில்லை.

மான்டெய்ன்

325.தெரியாது என்று உணர்வது அறிவை அடைவதற்குப் பெரிய வழி.

டிஸ்ரேலி

326.கற்றதை எல்லாம் முழுதும் மறக்க முடிந்த பொழுதே நாம் உண்மையில் அறிய ஆரம்பிக்கிறோம்.

தோரோ

327.தன்னலமின்மையும் நாணமுமே மெய்ஞ்ஞானத்தின் இலட்சணம்.

ரஸ்கின்

328.தன்னைப் பூரணமாய் அறியாதவன் ஒரு நாளும் பிறரைச் சரியாக அறிய முடியாது.

நோவாலிஸ்