பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

அறிவுக்



335. பக்தர் ‘தன்’னைத் துறத்தல் போலவே அறிஞரும் 'தன்'னைத் துறத்தல் அவசியமானதே.

எமர்ஸன்

336.அறிவிலிகள் அறிவாளிகள் மூலம் பயன்பெறுவதைக் காட்டிலும் அறிவாளிகள் அறிவிலிகள் மூலம் அதிகமாகப் பயன்பெறுவர்.

கேடோ

337.முடியுமானால் பிறரைவிட அறிவாளியாயிரு. ஆனால் அதை அவர்களிடம் கூறாதே.

செஸ்டர்பீல்டு

338.வித்தையில் விருப்பமுடையவன், தன்னை முழுவதும் அதற்குத் தத்தம் செய்யவும், அதிலேயே தன் வெகுமதியைக் காணவும் திருப்தியுடையவனாயிருக்க வேண்டும்.

டிக்கன்ஸ்

339.பிறர் அறியாததை வைத்து அவர்களை மதித்தல் ஆகாது. அறிந்துள்ளதை எவ்வாறு அறிந்திருக்கின்றனர் என்பதை வைத்தே அவர்களை மதிக்கவேண்டும்.

பிரெஞ்சுப் பழமொழி

340.ஒரு பிராணி வாழ்வதைக் கண்டு நீ ஆனந்திக்கும் அளவே நீ அதை அறிய முடியும். வேறு வழியில் முடியாது.

ரஸ்கின்

341.ஜலக் குமிழி தங்கக் கட்டிக்குச் சமானமாகுமானால் உயர்ந்த மூளையும் உண்மையான உள்ளத்திற்குச் சமானமாகும்.

ஹோம்ஸ்