பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

அறிவுக்



359. அறிஞனுக்கு அனைத்துலகும் தாய்நாடே. சாந்தமான மனத்திற்கு எந்த இடமும் அரண்மனையே.

லில்லி

360.அறிவிலி இடத்தையும் காலத்தையும் குறுக்க விரும்புகிறான். அறிஞனோ அவற்றை நீட்டவே விரும்புகிறான்.

ரஸ்கின்

361.தனக்குத்தானே வழிகாட்டி என்னும் வண்ணம் போதுமான அறிவுடையார் யாருமிலர்.

அக்கம்பிஸ்

362.வாழ்விடமிருந்தோ மக்களிடமிருந்தோ அதிகமாக எதிர்பாராதிருத்தலே மெய்யறிவின் ஜீவ அம்சமாகும்.

மார்லி

363.ஏறிக்கொள்ள அசுரனுடைய தோள்கள் கிடைக்குமானால் குள்ளன் அசுரனைவிட அதிகத் துரம் பார்க்க முடியும்.

கோல்ரிட்ஜ்

364.ஷேக்ஸ்பியர் என்னைவிட அதிக உயரமுள்ளவரே. எனினும் நான் அவரைவிட அதிகத் தூரம் பார்க்க முடியும். நான் அவருடைய தோள்களின் மேல் அல்லவோ நிற்கின்றேன்!

பெர்னார்டு ஷா

365.ஒன்றுமே அறியாதவன் வாழ்பவன் ஆகமாட்டான்.

கிரேஸியன்