பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

71



377. தவறு—அதில் எவ்வளவு உண்மையுளதோ அவ்வளவு அது அபாயகரமானதாகும்.

அமீல்

378.தன் திருப்தியை நாடாது, உலகத்தின் மதிப்பை நாடி, தன் விருப்பத்திற்கு மாறாகப் பொருளும் புகழும் தேடச் சிரமம் எடுத்துக்கொள்பவன் என் அபிப்பிராயத்தில் முழு மூடன் ஆவான்.

கதே

379.பிறர் நம்மை அறிந்துகொள்ள முடியாதபடி நடந்து கொள்வது நம் வழக்கம். அதன் முடிவு யாதெனில்—நாமே நம்மை அறிந்து கொள்ள முடியாதபடி நடக்கப் பயின்று விடுகிறோம் என்பதே.

பிரெஞ்சுப் பழமொழி

380.மாந்தர் மூடராக வாழலாம், ஆனால் மூடராக இறக்க முடியாது.

யங்


17. மூட நம்பிக்கை

381.மூட நம்பிக்கை மனித அமைப்பிலேயே ஓர் அம்சம். அதை ஓட்டிவிட்டோம் என்று மனோராஜ்யம் செய்யும்பொழுது அது நம் மனத்தில் ஒரு மூலையில் பதுங்கியிருக்கும். தனக்கு அபாயம் வராது என்ற நிலைமையில் திடீரென்று வெளியேறும்.

கதே