பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

அறிவுக்


382.மூட நம்பிக்கை பயந்து பதுங்கும்; அதனிடம் அதர்ம நினைவே அதிகம்; கடவுளிடம் நம்பிக்கை கிடையாது; துர்த் தேவதைகளை அஞ்சி நடுங்கும்.

நியூமன்18. கடமை

383.கடமையைச் செய்துவிட்டேன்; அதற்காகக் கடவுளைத் துதிக்கிறேன்.

செல்ஸன்

384.உன் கடமையைச்செய்ய முயல்க; அப்பொழுது உன் தகுதியை உடனே அறிந்துகொள்வாய்.

கதே

385.கடமையை நிறைவேற்ற அன்பு, தைரியம் என்று இரண்டு வழிக்காட்டிகள் உள. இரண்டும் ஒன்று கூடிவிட்டால் ஒருநாளும் வழி தவறுவதில்லை.

அனடோல் பிரான்ஸ்

386.சாந்தம், குதூகலம்-இவையே அறங்களின் முன்னணியில் நிற்பன. இவையே பரிபூர்ணமான கடமைகள் ஆவன.

ஆர். எல். ஸ்டீவன்ஸன்

387.நல்லவனும் ஞானியும் சில சமயங்களில் உலகத்தைக் கோபிக்கலாம், சில சமயங்களில் அதற்காக வருந்தலாம். ஆனால் உலகில் தன் கடமையைச் செய்பவன்