பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

அறிவுக்


நியூட்டன்

393. இன்று உன்னால் கூடியமட்டும் நன்றாய்ச் செய், நாளை அதனினும் நன்றாய்ச் செய்யும் ஆற்றல் நீ பெறக் கூடும்.

நியூட்டன்

394.அறமே ஆற்றல் என்று நம்புவோமாக. அந்த நம்பிக்கையுடன் நாம் அறிந்த கடமையை ஆற்றத் துணிவோமாக.

ஆப்ரகாம் லிங்கன்

395.உன் கடமையைத் தைரியமாய்ச் செய்துவிட்டால் நீ அடையும் பலன் யாது? அதைச் செய்ததையே பலனாய் அடைவாய். செயலே பலனாகும்.

ஸெனீக்கா

396.சுயநலத்திலுள்ள நன்மை யாது? மனிதர் கடமையைக் கடனாகவும், உரிமையை வரவாகவும் ஆக்கிவிட்டனர்; வியாபாரம் என்றும் வியாபாரமே!

கடனின்றி வாழ விரும்பினால் உரிமைகளைத் துறக்க வேண்டும்.

பால் ரிச்சர்டு

397.ஒருபொழுதும் தவறு செய்யாதவன் ஒன்றும் செய்யமாட்டான்.

ஆவ்பரி