பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


அறிவுக் கனிகள்.pdfதமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர்

திரு. தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,
பி. ஏ., பி. எல். எம். பி.


முகவுரை


உலகில் செல்வம் நிலை நிற்பதில்லை. அதிகாரமும் இதர மேம்பாடுகளும் நம்முடன் அழிந்து வருகின்றன. ஆனல் உயர்ந்தோர் கூறும் உறுதி மொழிகள் பல ஆயிர ஆண்டுகளுக்குப் பின்னும், என்றும் அழியாதனவாய், பின்வரும் மக்கள் அனைவருக்கும் சுடர் விளக்காய் இருந்து வருகின்றன. இவைகளே மனித வர்க்கத்தின் இணையற்ற பொக்கிஷங்களாகும். கோடிக்கணக்கான மக்களுக்கு இவை அறிவும் ஆற்றலும் கொடுத்து, அவர்கள் மனதை மலரச் செய்கின்றன.


ஸ்ரீ திருகூடசுந்தரம் இத்தகைய சிறந்த மொழிகளைத் திரட்டி தமிழ் மக்களுக்கு இப் புத்தகத்தின் மூலம் வழங்கி யிருக்கிறார். அவருக்கு நம் நன்றி உரியது. இப் புத்தகத்தைப் பயின்று பலரும் பயன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.


ஸ்ரீராமகிருஷ்ண
காரியாலயம் :
கோவை, 21-11-52.
தி. சு. அவினாசிலிங்கம்.