பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

81



23. வணக்கம்
கார்லைல்

432. உயர்ந்ததினிடம் உண்டாகும் பக்தியிலும் உயர்ந்த உணர்ச்சி கிடையாது.

கார்லைல்

433.வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிப்போம்.

கோல்ரிட்ஜ்

434.மக்கள் அனைவரும் பக்தர்களே. சிலர் புகழையும் பலர் பெரும்பாலோர் சுகத்தையும் வணங்குவர்.

கிரீஷியன்

435.அன்பும் நம்பிக்கையும் உடையவரே ஆண்டவனை வணங்குபவர்.

அகஸ்டைன் ஞானி


24. குற்றம் காணல்

436.தன்னைக் காண்பதுவே மிகக் கடினமான காரியம். பிறர் செயல்களில் குற்றம் காண்பதுவே மிக எளிதான காரியம்.

தேல்ஸ்