82
அறிவுக்
437.தீயோர் தம் குற்றங்களைத் தாமே மன்னித்து விடுவர்; நல்லோர் இனிமேல் அத்தகைய குற்றங்கள் செய்யாதிருப்பர்; முதற் குற்றத்தைச் சரியென்று சாதிப்பவன் மூன்றாவது குற்றம் செய்தவனாகின்றான்.
பென் ஜாண்ஸன்
438.பிறர் குற்றம் காண்பதும் தன் குற்றம் மறப்பதுமே மடைமையின் விசேஷ லட்சணம்.
ஸிஸரோ
439.பிறர் குற்றங்களை நம் கண் முன் வைத்துக் கொள்கிறோம். நம் குற்றங்களை நம் பின்புறம் வைத்துக் கொள்கிறோம்.
ஸெனிக்கா
440.ஒருவனிடம் குறைகாண்பது கடவுளிடம் குறை காண்டதாகும். கடவுள் அவனிடம் விளங்க விரும்பாத பொழுது நாம் ஏன் மனிதனைக் குறை கூற வேண்டும்?
பால் ரிச்சர்ட்
441.நாம் பிறரிடம் கண்டு பரிகாசம் செய்யுங் குற்றங்கள் நமக்குள் நம்மையே பரிகாசம் செய்யும்.
ப்ரௌண்
442.எல்லா விஷயங்களிலும் நல்ல அம்சத்தைக் காணவே எப்பொழுதும் முயல்க. அநேகமாக ஒவ்வொரு விஷயத்திலும் நல்ல அம்சம் உண்டு.
ஆவ்பரி