உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

85


அடிஸன்

457.பொய்யும் சூதும் முளையாத தேசமில்லை. அவற்றிற்கு எந்த சீதோஷ்ண ஸ்திதியும் ஆகும்.

அடிஸன்

148.குறை காண்போர் அநேக சமயங்களில் புழுக்களைக் களையும் பொழுது பூக்களையும் களைந்து விடுகின்றனர்.

ரிக்டர்


25.வஞ்சகம்

149.மனிதர் பிறப்பது மெய்யராக, ஆனால் இறப்பதோ வஞ்சகராகவே.

வாவனார்கூஸ்

150.அற உடை அணிந்த மறத்தைப்போல அபாயகரமான்து கிடையாது.

பப்ளியஸ் ஸைரஸ்

161.நயனம் ஒன்று சொல்ல நாவொன்று சொல்லின், விஷயம் அறிந்தவன் நயன மொழிகளையே நம்புவான்.

எமர்ஸன்

162.சூதிற்கும் அறிவிற்கு முள்ள வேறுபாடு குரங்கிற்கும் மனிதனுக்குமுள்ள வேறுபாடு போலாகும்.

பென்