பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

அறிவுக்


463.வஞ்சக நடை என்பது மறம் அறத்திற்குச் செய்யும் மரியாதையே யாகும்.

ரோஷிவக்கல்டு

464.நம்மிட முள்ளதாக நாம் பாசாங்கு செய்யும் குணங்களைப் போல், நம்மிடம் உண்மையாகவேயுள்ள குணங்கள் ஒரு பொழுதும் நம்மை நகைப்பிற் கிடமாக்குவதில்லை.

ரோஷிவக்கல்டு

465.உலகில் யாரும் அறியாதபடி உலவும் தீமை வஞ்சக நடை ஒன்றே. அதை ஆண்டவன் மட்டுமே அறிவான்.

மில்ட்ன்

466.வேஷம் போட்டு வெகு காலத்துக்கு ஏமாற்ற முடியாது. உண்மை இல்லாத இடத்தில் இயற்கை தலை காட்ட முயன்று கொண்டிருக்கும். என்றேனும் ஒருநாள் வெளிப்படுத்தியேவிடும்.

பிஷப் ஹால்

467. எல்லோரிலும் யாரை எளிதாக ஏமாற்ற முடியும்? தன்னைத்தான்.

புல்வெல் லிட்டன்

468.உயர்ந்தோர் தோஷங்களாலேயே உருப்பெற்றவர் என்பர்.

ஷேக்ஸ்பியர்