பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

87


 469. ஏமாற்றிப் பழக ஆரம்பிக்கும்பொழுது எவ்வளவு தூரம் நம்பக்கூடிய பொய்களைச் சொல்லத் தெரியாமல் திண்டாடுகிறோம்!

ஸ்காட்

470.தீயொழுக்கம் நல்லொழுக்கத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு நாம் அறியாமலே நம்மிடம் குடி புகுந்துவிடும்.

ஸெனீக்கா

471.என்ன அழகான பழம்—இதனுள்ளே அழுகல்—பொய் எவ்வளவு அழகாய் வேஷம் போட்டுக் கொள்கிறது

ஷேக்ஸ்பியர்

472.வஞ்சக நடையுள்ளவன் இயற்கையான அயோக்கியத் தனம், செயற்கையான ஏமாற்றுக்குணம் ஆகிய இரண்டு சரக்குகளைக் கொண்டு செய்து தங்க நிறம் கொடுத்த மாத்திரை யாவான்.

ஓவர்பரி


26. பழி வாங்குதல்

473.பழிவாங்குதல் ஆரம்பத்தில் இனிக்கும். ஆனால், சிறிது போதில் கசப்பாக மாறிவிடும். அது எய்தவனையே திரும்பிவந்து கொல்லும் அம்பாகும்.

மில்டன்