உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

89



481.பழி கூறாவண்ணம் வாழ்தலே தலைசிறந்த பழி வாங்குதலாகும்.

ஹெர்பர்ட்

482.பழி வாங்கினால் எதிரிக்கு நிகராவோம். அலட்சியம் செய்தால் எதிரியைவிட உயர்ந்தவராவோம்.

தாமஸ் புல்லர்


27. அனுதாபம்

483.எதை நான் இதய பூர்வமாக நம்புகிறேனே. அதையே வேறொரு ஆன்மாவும் நம்புமேல் அப்பொழுது நம்பிக்கை அளவு கடந்து ஆற்றல் பெறும்.

நொவாலிஸ்

484.எவ்வளவு தாழ்ந்தோருடைய அன்பு கிடைத்தாலும் போதும். எந்தக்காலத்திலும் மனிதன் அன்பின்றி மட்டும் வாழ முடியாது.

ரொமெய்ன் ரோலண்டு

485.அருட்கண்ணீர் தோய்ந்த முகத்தினும் உண்மை காட்டும் முகம் கிடையாது. கண்ணீர்விட்டு வருந்துவதைக் கண்டு மகிழ்வதினும் கண்ணீர்விட்டு இரங்குவது எத்துணைச் சிறப்பாகும்!

ஷேக்ஸ்பியர்

6