பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

அறிவுக்


508.நம்பிக்கையே துக்கத்தால் ஏற்பட்ட கறையைப் போக்கும்.

மூர்

509.எல்லாமொழிகளிலும் அதிக துக்ககரமானவை—“அப்படிச் செய்திருந்தால்”— என்னும் மொழிகளே.

விட்டியர்

510.ஆகாயத்தில் கட்டும் அரண்மனைகளை அழியாது வைத்திருக்க அதிகமான பொருள் தேவை

புல்வெர் லிட்டன்

511.நம்பிக்கை என்பது விழித்திருக்கும் நிலைமையில் காணும் கனவு.

பிளினி

512.நம்பிக்கை என்பது ஒருநாளும் இதயத்திலிருந்து அழிந்து போவதில்லை. மனிதன் என்றும் ஆசீர்வதிக்கப்படவேண்டியவனே யன்றி ஆசீர்வாதம் தருபவனல்லன்.

போப்

513.நம்பிக்கை நடத்தும் விருந்துக்குச் செல்ல விரும்பாதவர் கிடையார்.

காஸ்காயின்

514.நம்பிக்கை எதிர் காலத்துக்கு ஒளி தரும்; ஞாபகம் இறந்தகாலத்துக்கு முலாம் பூசும்.

மூர்