பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

95


 515.நம்பிக்கை என்பது அதிர்ஷ்ட தேவதை நடத்தும் ஏமாற்று லாட்டரியாகும். அதில் நூற்றுக்கு ஒருவர்க்கே பரிசு உண்டு.

கெளலி

516.உயிருள்ளவரை நம்பிக்கையும் இருந்துகொண்டிருக்கும்.

கே

517.சாத்தியம் என்று நம்புவோர்க்கே எதுவும் சாத்தியமாகும்.

வெரிஜில்


30. நன்றியறிதல்

518.நன்மை செய்தவர்க்கு நன்மை செய்யாதிருப்பது மனித குணத்திற்கு விரோதம். நன்மை செய்தவர்க்குத் தீமை செய்வது பேய்க் குணமாகும்.

ஸெனீக்கா

519.செய்நன்றி செலுத்த அதிகமாய் ஆத்திரப்படுவதும் செய்நன்றியைக் கொலை செய்வதில் ஒருவகையாகும்.

ரோஷிவக்கல்டு

520.நன்றி செய்தாயா—அதைப்பற்றிப் பேசற்க. நன்றி பெற்றாயா—அதைப்பற்றிப் பேசுக.

ஸெனீக்கா